Published Date: January 20, 2023
CATEGORY: CONSTITUENCY
தமிழகத்தில் நடத்தப்பட்ட செஸ் போட்டியை போன்று உலகக்கோப்பை கபடி போட்டியை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சர் கபடி கழக நிர்வாகிகள் சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தார். இதையடுத்து சட்டசபை கூட்டத் தொடரில் தமிழகத்தில் உலகக்கோப்பை கபடி போட்டியை நடத்த வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல் அமைச்சருக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலையில் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் கபடி கழகத் தலைவர் சோலைராஜா தலைமையில், செயலாளர் ஹபிபுல்லா நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும், விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை 3000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாக உயர்த்திய முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் உலகக் கோப்பை கபடியை தமிழகத்தில் நடத்த பரிந்துரை செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்ததும், அதனை நடத்துவது குறித்தும் மனுக்களை வழங்கினர். அப்போது அமைச்சர்கள் பி.டி.ஆர். தியாகராஜன், மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. மற்றும் கபடி குழுவினர் விளையாட்டு சங்கத்தினர் உடனிருந்தனர்.
Media: Dinakaran